தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ஆன்லைனில்... விண்ணப்பிக்கலாம்; ஆக., 6ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ஆன்லைனில்... விண்ணப்பிக்கலாம்; ஆக., 6ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ஆன்லைனில்... விண்ணப்பிக்கலாம்; ஆக., 6ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு


ADDED : ஜூலை 29, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுகளை சென்டாக் நிரப்ப உள்ளது. நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத 7,080 இடங்களுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தியது.அடுத்து, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர்வேதம்), கால்நடை மருத்துவம்உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தில் ஆன் லைனில் விண்ணப்பம் வரவேற்றுள்ளது. அடுத்த மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எவ்வளவு சீட்டுகள்


நீட் அடிப்படையிலான மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் இன்னும் இறுதியாகவில்லை. இருப்பினும் 1,160 சீட்கள் உள்ளதாக சென்டாக் அறிவித்துள்ளது.

விண்ணப்பம் கட்டணம்


அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை விண்ணப்ப கட்டணமாக,எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு,500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக இடங்கள், சுய நிதி இடங்களை பொருத்தவரை எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 1,000 ரூபாய், இதர பிரிவினர், பிற மாநில மாணவர்களுக்கு 2,000 ரூபாய், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.ஐ., பிரிவினருக்கு 5,000 ரூபாய் விண்ணப்பம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்


அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு புதுச்சேரி குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அகில இந்திய நிர்வாக இடங்கள், சுய நிதி இடங்களுக்கு புதுச்சேரி குடியுரிமை உள்ளவர்கள்., பிற மாநில மாணவர்கள், ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்பிக்கலாம். தெலுங்கு, கிறிஸ்துவ சிறுபான்மையினர் மருத்துவ இடங்களுக்கு புதுச்சேரி குடியுரிமை உள்ள மாணவர்கள மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இதேபோல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., படிப்புகளில் என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்ஸ்சர்டு, ஓ.சி.ஐ., (அயலக வாழ் இந்தியர்கள்) இந்திய குடியுரிமை இல்லாத, வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள பாரின் நேஷனல் பிரிவினர் விண்ணப்பிக்கலாம். கால்நடை மருத்துவ படிப்பில் என்.ஆர்.ஐ., பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

உறுதிமொழி படிவம்


புதுச்சேரி குடியுரிமை உள்ள மாணவர்கள் 20 ரூபாய் இ.டாம்ப் பேப்பரில் உறுதிமொழி படிவத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த படிவத்தில் முதல் நபராக பெற்றோர் பெயர், இரண்டாம் நபராக கன்வீனர், சென்டாக் இடம் பெற வேண்டும். பெற்றோரும், மாணவரும் கையொப்பமிட வேண்டும். இந்த உறுதிமொழி படிவத்தில், எக்ஸிகியூட்டி மாஜிஸ்திரேட், நோட்டரி கையெழுத்து பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உதவிக்கு...


மாணவர் சேர்க்கை சம்பந்தமான சந்தேகங்களுக்கு centacugneet@dhtepdy.edu.in என்ற இ-மெயில் முகவரியிலும் 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாணவர்களுக்கு

புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் கல்வி சான்றிதழ்களுடன், குடியுரிமை, ஜாதி, இ.டபுள்யூ.எஸ்., பிராந்திய இட ஒதுக்கீடு, விடுதலை போராட்ட வீரர், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, மாற்றுத்திறனாளி, விளையாட்டு சான்றிதழ்களை 100 முதல் 500 கேபி அளவுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான டி.சி.,யுடன் ஸ்டடி சர்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us