ADDED : ஆக 08, 2025 02:16 AM
புதுச்சேரி: உப்பளம், முதலியார்பேட்டை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பா.ஜ., கட்சியில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி உப்பளம், ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகளை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் வழிகாட்டுதலின் பேரில், நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் நியமித்துள்ளார்.
அதன்படி, உப்பளம் தொகுதி பா.ஜ., தலைவராக ஜெயபிரியதர்ஷினி, துணைத் தலைவராக மேகநாதன், லோகநாதன், ஆரோக்கியசாமி, பொதுச் செயலளராக இளங்கோ, ராஜேந்திரன், செயலாளராக கார்த்திகா, கணேஷ்குமார், பொருளாளராக விஜய்(எ)ஜான், சமூக ஊடக துறை அமைப்பாளராக விமல்ராஜ், தொழில்நுட்ப துறை அமைப்பளராக ஆரோக்கியராஜ், மனதின் குரல் ஒருங்கிணைப்பளராக முருகன், முதலியார்பேட்டை தொகுதி தலைவராக புவனேஸ்வரி, துணைத் தலைவர்களாக கனகராஜ், குமாரவேல், அலிமது, பொதுச் செயலளராக ராஜ்மோகன், மேகநாதன், செயலாளர்களாக மணிகண்டன், வெங்கட்ராகவன், முனிராஜன், பொருளாளராக இளவரசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் பிறப்பித்துள்ளார்.