/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., தேர்தல் குழு நிர்வாகிகள் நியமனம்
/
காங்., தேர்தல் குழு நிர்வாகிகள் நியமனம்
ADDED : பிப் 21, 2026 05:09 AM
புதுச்சேரி: புதுச்சேரி காங்., தேர்தல் குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால், புதுச்சேரி காங்., மாநில தேர்தல் கமிட்டி குழு, தேர்தல் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் வாக்குறுதிக்குழு, பிரசாரக்குழு, தகவல் மற்றும் ஊடகப்பிரிவு குழுக்களுக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
அதன்படி, மாநில தேர்தல் குழு தலைவராக வைத்திலிங்கம் எம்.பி., துணைத் தலைவராக வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் தலைவர் சுப்ரமணியன், ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் வல்சராஜ், பெத்தபெருமாள், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

