ADDED : அக் 15, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி வேளாண்துறை செயலர் சவுத்ரி முகமது யாசினுக்கு, துறை இயக்குனர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வேளாண் துறை இயக்குநராக பணியாற்றிய வசந்தகுமார், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்றார்.
அதன்பின், இயக்குநர் நியமிக்கப்படாததால், விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தார். மேலும், பல்வேறு கட்சித் தலைவர்கள் இயக்குநர் நியமிக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், வேளாண் துறையின் அரசு செயலர் சவுத்ரி முகமது யாசினுக்கு, கூடுதல் பொறுப்பாக இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.