/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத்துறை இயக்குநர் நியமனம்
/
சுகாதாரத்துறை இயக்குநர் நியமனம்
ADDED : டிச 07, 2024 07:23 AM

புதுச்சேரி: சுகாதாரத்துறையின் புதிய இயக்குநராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநராக ஸ்ரீ ராமுலு இருந்தார். அவர் கடந்த ஆக., 15ம் தேதி ஓய்வு பெற்றார்.அந்தபொறுப்பை அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேள் கவனித்து வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையின் நுண்கதிர் சிகிச்சைப் பிரிவு மூத்த மருத்துவர் ரவிச்சந்திரன் மாநிலச் சுகாதாரத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை சுகாதார துறை சார்பு செயலர் முருகேசன் பிறப்பித்தார்.
சுகாதார துறை இயக்குநர் ரவிச்சந்சந்திரன், ரேடியாலஜி துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 2012 முதல் 2021ம் ஆண்டு வரை ரேடியாலஜி துறை தலைவராக பணியாற்றினார்.தற்போது அரசு மருத்துவமனையில் மீண்டும் நுண்கதிர் சிகிச்சைப் பிரிவு துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 1988ம் ஆண்டு புதுச்சேரி சுகாதார துறையில் டாக்டராக கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பணியை துவங்கினார்.