/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளர் நியமனம்
/
ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளர் நியமனம்
ADDED : பிப் 20, 2024 02:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளராக வழக்கறிஞர் மருதுபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் பணிகளை காங்.,கட்சி ஆரம்பித்து முழுவீச்சில் இறங்கியுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பல்வேறு தரப்பினரின் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.
அத்துடன் தொகுதி பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ராஜ்பவன் சட்டசபை தொகுதியின் பொறுப்பாளராக வழக்கறிஞர் மருதுபாண்டியனை, காங்., கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., நியமித்துள்ளார்.
அவருக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

