தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கால்நடை டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை

 கால்நடை டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை

 கால்நடை டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை


ADDED : மார் 10, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சிறு கால்நடை மருந்தகங்களில் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட டாக்டர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணையை வழங்கினார்.

புதுச்சேரி கால்நடை துறையில் தரம் உயர்த்தப்பட்ட சிறு கால்நடை மருந்தகங்களில் ஒப்பந்த அடிப்படையில் 8 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அதன்படி, வாழைகுளம், கிருமாம்பாக்கம், குருவிநத்தம், சந்தை புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம் மற்றும் காரைக்கால் மருந்தகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 4 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, கால்நடை டாக்டர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதில், அரசு கொறடா ஆறுமுகம், கால்நடை துறை இயக்குநர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குநர்கள் குமரன், ராஜீவ், அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us