/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய தடகள போட்டியில் பதக்கம் மாணவருக்கு பாராட்டு விழா
/
தேசிய தடகள போட்டியில் பதக்கம் மாணவருக்கு பாராட்டு விழா
தேசிய தடகள போட்டியில் பதக்கம் மாணவருக்கு பாராட்டு விழா
தேசிய தடகள போட்டியில் பதக்கம் மாணவருக்கு பாராட்டு விழா
ADDED : அக் 24, 2024 06:07 AM

காரைக்கால்: தேசிய தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவருக்கு, விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
காரைக்கால் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் கேந்திர செயலாளர் கார்த்தி. இவரது மகன் யோகேஷ். கேந்திர வித்யாலயா பள்ளி மாணவரான இவர், சமீபத்தில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
தேசிய போட்டியில் பதக்கம் வென்ற மாணவருக்கு, காரைக்கால் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு, காரைக்கால் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் விஜயன், மாவட்ட கேந்திரத் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கி, மாணவரை பாராட்டி பரிசு வழங்கினர்.
வடக்கு தொகுதி தலைவர் சுரேஷ் கண்ணா, தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.