ADDED : ஜூலை 16, 2025 11:28 PM

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த மாணவர் தின விழாவில், நடன நிகழ்ச்சி நடத்திய வட்டம் 1 பள்ளி மாணவர்களை இணை இயக்குநர் சிவகாமி பாராட்டினார்.
கருவடிக்குப்பம், காமராஜர் மணிமண்டபத்தில், காமராஜரின் 123வது பிறந்த நாள் மாணவர் தின விழா நடந்தது. விழாவில், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் வட்டம் - 1 சார்பாக குருசுகுப்பம், புதுப்பாளையம், புதுச்சேரி சுசீலாபாய் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி ஆகிய மூன்று பள்ளி, மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை மூன்று பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பொறுப்பாசிரியர் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.
சிறப்பாக நடனம் ஆடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை இணை இயக்குநர் சிவகாமி, தொடக்கக்கல்வி துணை இயக்குநர் கவுரி, முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன், தொடக்கக்கல்வி துணை இயக்குநர் (பெண்கல்வி) ராமச்சந்திரன், பள்ளித்துணை ஆய்வாளர் வட்டம்-1 அனிதா ஆகியோர் பாராட்டினர்.