/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்திசெமினார் பள்ளி மாணவருக்கு பாராட்டு
/
பெத்திசெமினார் பள்ளி மாணவருக்கு பாராட்டு
ADDED : நவ 17, 2024 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற எண்களை ஒப்புவித்த பெத்திசெமினார் பள்ளி எல்.கே.ஜி., மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி, பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் எல்.கே.ஜி., பயிலும் மாணவர் பிரஜ்யோத் கார்த்தி. இவர் உலக சாதனை புத்தகத்தில், இடம்பெற 1 முதல் 425 எண்களை ஆங்கிலத்தில், 14 நிமிடம் 25 வினாடிகள், ஒப்புவித்தார். இவரது சாதனை முயற்சியை பாராட்டி, பள்ளி சார்பில், விழா நடந்தது.
பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் அரசு கொறடா ஆறுமுகம், மாணவரை பாராட்டினார். தாசில்தார் மணிகண்டன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.