ADDED : நவ 26, 2024 06:37 AM
புதுச்சேரி: புதுச்சேரி நிதி செயலர், நெஞ்சுவலி காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
புதுச்சேரியில் நிதி மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் செயலாளராக ஆஷிஸ்மோரே இருந்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் இரவு முதல் இருதயப் பகுதியில் வலி ஏற்பட்டதால், நேற்று காலை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். அங்கு உடனடியாக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதன் பின், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் உள்ள இருதயவியல் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாக அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமாக உள்ளதாகவும்,அதனை தொடர்ந்து 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் இருந்து விட்டு நாளை வீடு திரும்புவார் என மருத்துவ அலுவலர்கள் கூறினர்.