தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாற்று திறனாளிகளுக்கு பென்ஷன் வழங்க ஒப்புதல்

மாற்று திறனாளிகளுக்கு பென்ஷன் வழங்க ஒப்புதல்

மாற்று திறனாளிகளுக்கு பென்ஷன் வழங்க ஒப்புதல்


ADDED : அக் 29, 2024 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மாற்று திறனாளிகளுக்கு அக்டோபர் மாத பென்ஷன் மற்றும் விவசாய கூட்டுறவு கடன் தள்ளுபடிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள 21329 மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு புதுச்சேரி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உதவி விதிகள் திட்டத்தின் கீழ், பென்ஷன் தொகை வழங்க புதுச்சேரி சமூக நல இயக்குநரகம் மூலம் அக்டோபர் 2024 மாதத்திற்கு ரூ.7 கோடியே 56 லட்சத்து 90 ஆயிரத்து 300 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரி மாநில விவசாய கூட்டுறவு கடன் நிறுவனங்களில் இருந்து சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்ற ரூ. 11.61 கோடி விவசாய கடன்கள், வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்ய புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறையின் முன்மொழிவுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதற்காக, முதல் தவணை தொகையாக ரூ. 2 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us