/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி திறனாய்வு தேர்வு..
/
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி திறனாய்வு தேர்வு..
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி திறனாய்வு தேர்வு..
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி திறனாய்வு தேர்வு..
ADDED : ஏப் 14, 2025 04:17 AM
புதுச்சேரி:ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு வரும் 16ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நவீன காலத்திற்கு ஏற்ப உயர் கல்வியில் பல மாற்றங்களை செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர தொழில்நுட்பம் மற்றும் டேட்டா சயின்ஸ், விஷூவல் கம்யூனிகேஷன் போன்ற பாடங்களை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு இணையாக நடத்தி வருகிறது.இளங்கலை பட்டதோடு ஒருங்கிணைந்த சி.ஏ., - சி.எம்.ஏ., - ஏ.சி.சி.ஏ., போன்ற தொழில்முறை கல்வி, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கான பயிற்சிகளும் அளித்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியருக்கு கோனேரிக்குப்பம் ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 16ம் தேதி காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை திறனாய்வு தேர்வு நடக்கிறது.
தேர்வில் குழு போட்டியில் முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய், தனிநபர் போட்டியில் முதல் 6 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
மேலும், 100 சதவீத வேலை வாய்ப்புடன் கூடிய பாடத்திட்டத்தை தேர்வு செய்ய பெற்றோர்கள், நிபுணர்களுடன் கலந்துரையாடும் கருத்தரங்கம் நடக்கிறது.மேலும், விபரங்களுக்கு 90870 43999, 90870 42999 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மாணவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கு மதிய உணவு, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 4:00 மணிக்கு வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்யா நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி பரிசுகள் வழங்குகின்றனர். இதனை கல்லுாரி நிறுவனர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.