/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் அரியாங்குப்பம் நாட்டு பட்டாசுகள்
/
கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் அரியாங்குப்பம் நாட்டு பட்டாசுகள்
கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் அரியாங்குப்பம் நாட்டு பட்டாசுகள்
கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் அரியாங்குப்பம் நாட்டு பட்டாசுகள்
ADDED : அக் 20, 2024 04:30 AM
தீபாவளி என்றாலே, நம் அனைவரின் நினைவுகளிலும் முதலிடம் பிடிப்பது பட்டாசுகள் தான். ஆண்டுதோறும் வித்தியாசமான பல்வேறு பட்டாசுகள் சந்தையில் குவிந்து கொண்டு இருக்கின்றன. அதேபோல, ஒரு சில பட்டாசு வகைகள், மெல்ல மெல்ல காணாமலும் போய், முற்றிலுமாக இல்லாமலே போய் விட்டன.
அதில் குறிப்பிடத்தக்க முக்கிய ரகம், அரியாங்குப்பட்டம் நாட்டு பட்டாசு. புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்கும் தொழில் அமோக நடந்த இடம் அரியாங்குப்பம்.
அங்கு தயாரிக்கும் பட்டாசுகள் தரமாகவும், விலை குறைவாகவும், அதிக சத்தம் இருக்கும் என்பதால் மவுசு அதிகம். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரியாங்குப்பத்திற்கு படையெடுத்து வந்த, அங்கு தயாரிக்கும் நாட்டு பட்டாசுகளை வாங்கி செல்வார்கள். அரியாங்குப்பத்தில், நாட்டு பட்டாசை தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலைகள், சின்ன வீராம்பட்டினம், மணவெளி, ஓடைவெளி, நோணாங்குப்பம் ஆற்றுப் பகுதி அருகே உள்ள அலுத்துவெளி ஆகிய இடங்களில் இயங்கி வந்தன. அரசு உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்கும் தொழில் படு ஜோராக நடந்து வந்தது.
ஆனால் கடந்த, ஐந்தாண்டுகளில், மொத்தம் ஐந்து இடங்களில் பட்டாசு தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகள் காணாமல் போய் விட்டன.
இதுகுறித்து, அரியாங்குப்பத்தில், பல தலைமுறைகளாக பட்டாசு விற்பனை செய்து வரும், விஜய சாமூண்டீஸ்வரி கூறியதாவது:
எனது தாத்தாவும், அப்பாவும் பட்டாசை தயாரித்து விற்றனர். தற்போது நான் இந்த பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். அரியாங்குப்பத்திற்கு பெருமை சேர்த்து வந்த, நாட்டு பட்டாசு தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகள் இல்லாமல் போனதற்கு மூலப் பொருட்கள் விலை உயர்வு தான் முக்கிய காரணம்.
அதுமட்டுமின்றி, வேலை செய்யும் ஆட்கள் பற்றாக்குறை, அதிமான தொழில் வரி போன்ற காரணங்களால் பட்டாசு உற்பத்தி இங்கு நசிந்து போய் விட்டது என்றார்.