sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரிமதி தென்னகனார் பிறந்த நாள் விழா

/

அரிமதி தென்னகனார் பிறந்த நாள் விழா

அரிமதி தென்னகனார் பிறந்த நாள் விழா

அரிமதி தென்னகனார் பிறந்த நாள் விழா


ADDED : மார் 13, 2026 06:25 AM

Google News

ADDED : மார் 13, 2026 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இளைஞர் அமைதி மையம் சார்பில், புதுச்சேரி அரசின் முதல் தமிழ்மாமணி, தமிழக அரசின் கலைமாமணி, பாவேந்தர் விருது மற்றும் மத்திய அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான தேசிய விருது பெற்ற மூத்த தமிழறிஞர் அரிமதி தென்னகனாரின் 92வது பிறந்த நாள் விழா ஆனந்தரங்கர் நகரில் நடந்தது.

நிறுவனர் அரிமதி இளம்பரிதி தலைமைத் தாங்கினார். கவிஞர் ஆதி பாலசுப்ரமணியன் வரவேற்றார். கலை பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குநர் வீரபத்ரசாமி முன்னிலை வகித்தார்.

தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அரிமதி தென்னகனாரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பேராசிரியர் சம்பத்குமார், கவிஞர் அரிமதி இளம்பரிதி எழுதிய நன்றி அப்பா மற்றும் அப்பா என்றோர் அரிமா நுால்களை வெளியிட்டார்.

தொடர்ந்து நடந்த கவியரங்கில் கவிஞர்கள் பலர் கலந்து கொண்டு அரிமதி தென்னகனார் குறித்து கவிதை வாசித்தனர். விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அரிமதி இளவேங்கை நன்றி கூறினார். ஏற்பாடுகளை நந்தினி, பத்மநாபன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us