/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார் திருடிய வாலிபர் கைது அரியாங்குப்பம் போலீஸ் அதிரடி
/
கார் திருடிய வாலிபர் கைது அரியாங்குப்பம் போலீஸ் அதிரடி
கார் திருடிய வாலிபர் கைது அரியாங்குப்பம் போலீஸ் அதிரடி
கார் திருடிய வாலிபர் கைது அரியாங்குப்பம் போலீஸ் அதிரடி
ADDED : ஆக 10, 2025 08:40 AM

புதுச்சேரி : அரியாங்குப்பம், அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் தர்மராஜ், 48; கடலுார் - புதுச்சேரி சாலையில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இவர் தனது பி.ஒய் 01 சி.எப். 3637 பதிவெண் கொண்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான காரை ஒர்க் ஷாப் அருகே கடந்த 29ம் தேதி நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, காரை காணவில்லை.
தர்மராஜ் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், நோணாங்குப்பம், ஆற்றங்கரை வீதியை சேர்ந்த வாழுமுனி (எ) ஜெயக்குமார், 26; என்பவர் காரை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, காட்டுமன்னார்கோவில் அருகே குச்சூர் கிராமத்தில் பதுங்கியிருந்த ஜெயக்குமாரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அரியாங்குப்பம் கார் ேஷாரூமில் இருந்த ரூ.1.60 லட்சம் ரொக்கத்தை திருடிக்கொண்டு, அங்கிருந்த கார்களை சேதப்படுத்தியது. தவளக்குப்பம், இளவரசன் நகரில் பைக் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த கார் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
ஜெயக்குமார் மீது புதுச்சேரி மற்றும் தமிழக போலீஸ் நிலையத்தில் வாகன திருட்டு, வீடு புகுந்து திருடுதல், கால்நடைகள் திருட்டு உள்ளிட்ட 8 வழ க்குகள் நிலுவையில் உள்ளது.