sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியூர் ராமச்சந்திரா பள்ளி மாநில அளவில் சாதனை

 அரியூர் ராமச்சந்திரா பள்ளி மாநில அளவில் சாதனை

 அரியூர் ராமச்சந்திரா பள்ளி மாநில அளவில் சாதனை


ADDED : மே 22, 2026 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 02:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: அரியூர் ராமச்சந்திரா வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 93 மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து ள்ளனர். பள்ளியில் மாணவி பார்கவி 494 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், பள்ளியில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். அவர், தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99 மற் றும் சமூக அறிவியல்-98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பள்ளி மாணவிகள் ஆண்ரினா, நிவேதா மற்றும் மாணவர் ஹரிஷ் ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி கீர்தனா 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மாணவிகள் ரித்துபர்ணா-486, பவித்ஷா-484, ஜனனி-483, ரேஷ்மா-481 மற்றும் பிரியதர்ஷினி-488 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் பாராட்டினார். அவர் கூறுகையில், 'எங்கள் பள்ளி கிராம பகுதியில் இருந்தாலும், நகர பகுதிக்கு இணையாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சாதனைக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி' என்றார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் ராம்பிரசாத் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us