/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவிலில் சர்வ தரிசனத்திற்கு ஏற்பாடு
/
மணக்குள விநாயகர் கோவிலில் சர்வ தரிசனத்திற்கு ஏற்பாடு
மணக்குள விநாயகர் கோவிலில் சர்வ தரிசனத்திற்கு ஏற்பாடு
மணக்குள விநாயகர் கோவிலில் சர்வ தரிசனத்திற்கு ஏற்பாடு
ADDED : ஜன 01, 2025 07:26 AM
புதுச்சேரி: புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு அர்ச்சனையை ரத்து செய்து, நாள் முழுதும் சர்வ தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று 1ம் தேதி காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மூலவர் மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
காலை 5:00 மணிக்கு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அபிேஷக ஆராதனை முடிந்து, மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. உட்பிரகாரத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு அர்ச்சனைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டு, சர்வ தரிசனத்திற்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதியம் 2:00 மணிக்கு நடை மூடப்பட்டு மதியம் 3:00 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. அதன்பின், பக்தர்கள்வருகையை பொருத்து இரவு 9:30 அல்லது 10:00மணி வரை கோவில் நடை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்க 35 ஆயிரம் லட்டு பிரசாதங்கள் கோவில் நிர்வாகம் தயார் செய்துள்ளது.