/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி.,யில் டிரைவர், கண்டக்டர் பணி ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஏற்பாடு
/
பி.ஆர்.டி.சி.,யில் டிரைவர், கண்டக்டர் பணி ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஏற்பாடு
பி.ஆர்.டி.சி.,யில் டிரைவர், கண்டக்டர் பணி ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஏற்பாடு
பி.ஆர்.டி.சி.,யில் டிரைவர், கண்டக்டர் பணி ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஏற்பாடு
ADDED : ஏப் 10, 2025 04:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான டிரைவர், கண்டக்டர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ( பி.ஆர்.டி.சி.,) த்தில் 40 டவுன் பஸ்கள் உட்பட மொத்தம் 96 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து கழக விதிப்படி ஒரு பஸ்சிற்கு டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் மற்றும் நிர்வாக ஊழியர்கள் என மொத்தம் 7 பேர் இருக்க வேண்டும்.
இந்நிலையில் நிரந்தர ஊழியர்கள் பெரும்பாலானோர் பணி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இருக்கிற சொற்ப ஊழியர்களும் அரசியல் செல்வாக்கில் அயல் பணியில் உள்ளனர்.
இதனால், தற்போது 240 ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பி.ஆர்.டி.சி.,க்கு புதிதாக 75 பஸ்கள் வாங்கி, புதிய வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதனையொட்டி கூடுதல் டிரைவர், கண்டக்டர்கள் தேவை உள்ளதால், இப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் முகமது இஸ்மாயில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பி.ஆர்.டி.சி.,யில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பை தவிர்க்க, ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
டிரைவர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 25 முதல் 35 வயதிற்கு உட்பட்ட, கனரக ஓட்டுநர் உரிமம், 2 ஆண்டு அனுபவ சான்று வைத்திருக்க வேண்டும்.
கண்டக்டர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, கண்டக்டர் லைசன்ஸ் மற்றும் முதலுதவி சான்று பெற்று, 6 மாதம் அனுபவ சான்று வைத்திருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள், பி.ஆர்.டி.சி., புதுச்சேரி பணிமனையில், உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தாரர்களுக்கு தகுதித்திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்தி தேர்வு செய்து, தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுவார்கள்.
டிரைவருக்கு 8 மணி நேர பணிக்கு ரூ.560ம், கண்டக்டர் பணிக்கு ரூ.553 ஊதியம் வழங்கப்படும். 40 வேலை நாட்களுக்கு பிறகு 10 நாட்கள் பணி நிறுத்தம் செய்து மீண்டும் பணி வழங்கப்படும்.
அதிகப்பட்சம் ஆண்டிற்கு 180 நாட்களுக்கு பணி வழங்கப்படும். இவர்கள் பணி நிரந்தரம் உட்பட எவ்வித பணி பலன்களும் கோர இயலாது.