ADDED : மே 21, 2026 06:38 AM
புதுச்சேரி: உழவர்கரை மற்றும் புதுச்சேரி தாலுகா அலுவலகங்களுக்கு சிறப்பு வார இறுதி வேலை நாட்களாக வரும், 23ம் தேதி மற்றும் 24ம் தேதி ஆகிய இரு நாட்களில் இயங்கும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், குடியிருப்பு-இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதி-சமூகச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வருவாய்த்துறையில் பெருமளவில் குவிகின்றன.
தற்போது, நீட், சென்டாக் மற்றும் பல்வேறு இதர தொழில்முறை கல்லுாரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்காக இந்தச் சான்றிதழ்களைப் பெற வில்லியனுார் மற்றும் பாகூர் தாலுகா அலுவலகங்களுக்கு வருகின்றனர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைக் கல்வி நிறுவனங்களில் உரிய காலக்கெடுவிற்குள் சமர்ப்பிப்பதை உறுதி செய்யவும், இந்த பொது விடுமுறை நாட்களில் அலுவலகங்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது என புதுச்சேரி சப் கலெக்டர் தயானந்த் தெண்டுல்கர், வெயிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
