/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிதிநிலை தணிக்கை அறிக்கை சட்டசபையில் வைக்க ஏற்பாடு
/
நிதிநிலை தணிக்கை அறிக்கை சட்டசபையில் வைக்க ஏற்பாடு
நிதிநிலை தணிக்கை அறிக்கை சட்டசபையில் வைக்க ஏற்பாடு
நிதிநிலை தணிக்கை அறிக்கை சட்டசபையில் வைக்க ஏற்பாடு
ADDED : நவ 23, 2024 06:23 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் நிதிநிலை, சுகாதார சேவைகள் மீதான தணிக்கை சட்டசபையில் சமர்பிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி அரசு துறைகள் மீதான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை, சட்டசபையில் வைக்கப்பட்டு, கவர்னருக்கு கட்டாயம் அனுப்பப்படுகின்றது. இதுமட்டுமின்றி எம்.எல்.ஏ.,க்களின் கவனத்திற்காகவும் வழங்கப்படுகின்றது.
அதன்படி, மார்ச் 2022 இல் முடிவடைந்த ஆண்டிற்கான பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகளின் மேலாண்மை குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கை வைப்பதற்காக யூனியன் பிரதேச அரசாங்கத்திற்கு நேற்று அனுப்பப்பட்டது.
இதேபோல், மார்ச் 2023 முடிவடைந்த ஆண்டிற்கான புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நிதி தணிக்கை அறிக்கை சட்டசபையில் வைக்க அனுப்பப்பட்டுள்ளது. இத்தகவலை மாநில முதன்மை கணக்காய தலைவர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

