/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விமானம் மூலம் அயோத்தி சென்று ராமரை தரிசிக்க ஏற்பாடு
/
விமானம் மூலம் அயோத்தி சென்று ராமரை தரிசிக்க ஏற்பாடு
விமானம் மூலம் அயோத்தி சென்று ராமரை தரிசிக்க ஏற்பாடு
விமானம் மூலம் அயோத்தி சென்று ராமரை தரிசிக்க ஏற்பாடு
ADDED : பிப் 12, 2024 06:41 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து, விமானம் மூலம் அயோத்தி சென்று, பால ராமரை தரிசிக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், விமானம் மூலம், புதுச்சேரி - வாரணாசி - பிரயாக்ராஜ் - அயோத்தி செல்ல, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த சிறப்பு சுற்றுலா வரும் மார்ச் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை, நான்கு இரவுகள், மற்றும் ஐந்து பகலை, உள்ளடக்கி திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் காசி விஸ்வநாதர் கோவில், கங்கா ஆரத்தி, கால பைரவர், சங்கட மோகன், துர்கா கோவில், அனுமன் கர்ஹி, சாரநாத், பிரயாக்ராஜ், திரிவேணி சங்கம், அயோத்தி பால ராமர் கோவில், ஜென்ம பூமி, அனந்த பவன், அனுமன் பவன், அயோத்தி உள்ளிட்ட இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட உள்ளது.
டிக்கெட் கட்டணமாக, ரூ. 32 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த கட்டணத்தில், விமான கட்டணம், ஏ.சி., டீலக்ஸ் தங்குமிடம், காலை உணவு, கங்கா ஆரத்தி படகு சவாரி, காசி விஸ்வநாதர் சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தை தொடர்பு கொள்ளவும்.