தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் தகராறு 3 பேர் கைது

போதையில் தகராறு 3 பேர் கைது

போதையில் தகராறு 3 பேர் கைது


ADDED : செப் 20, 2024 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை எஸ்.வி., பட்டேல் சாலையில் மது போதையில் வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், திருப்பூரை சேர்ந்த அரவிந்த்,30; என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

அதே போல் கடற்கரை சாலையில் இரண்டு வாலிபர்கள் போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தனர். அவர்களை ஒதியஞ்சாலை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் விழுப்புரம் நவீன்குமார், 21; ராகுல், 23, என தெரியவந்தது. இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us