ADDED : ஜன 02, 2025 11:06 PM

அ நிறம் | அளவு
பாகூர்:குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், மண்டல அளவில் நடைபெற்ற கலை இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடந்தது.
ஆசிரியர் கோமளா வரவேற்றார். தலைமையாசிரியர் கோமதி தலைமை தாங்கினார்.நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் இரிசப்பன் நோக்கவுரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர் சாமுண்டீஸ்வரி, தேவி, கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் ரேவதி, குபேரன், அமலா மற்றும் அருளரசி வாழ்த்தி பேசினர்.
விழாவில், மண்டல அளவில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள், பல்நோக்கு ஊழியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.
