
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் 'புரட்சிக்கவிஞரும், உலககவி பாரதியாரும்' தலைப்பில் கலை இலக்கிய விழா பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது.
அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கினார். கிறிஸ்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் அன்பழகன் வாழ்த்தி பேசினார். செயலர் வள்ளி, கிருஷ்ணகுமார், நமச்சிவாயம், விசாலாட்சி, பேராசிரியர் விசாலாட்சி,பேச்சாளர் ஜெயந்தி ராஜவேலு முன்னிலை வகித்தனர்.
பாரதியார் பிறந்த நாளையொட்டி சிறப்புக் கவியரங்கம் நடந்தது. இதில், ரமேஷ் பைரவி, மதன், பொய்யாது ஏகாம்பரம் ஆகியோர் கவிதை வாசித்தனர். விழாவையொட்டி, மாணவர்கள் இடையே திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, ராஜேஷ் வரவேற்றார். ஈஸ்வரிதேவி நன்றி கூறினார்.

