ADDED : அக் 26, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கலை கல்லுாரியில் கலை விழா நடந்தது.
தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கலை கல்லுாரியில், ஆர்ட்பீட் என்ற தலைப்பில், கலைவிழா நேற்று முன்தினம் துவங்கியது. கலாசாரம் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. உதவி பேராசிரியர் செந்தமிழ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹென்னா மோனிஷா தலைமை தாங்கி, கலாசாரம், கலை நிகழ்வுகள், பற்றி சிறப்புரை ஆற்றினார்.
ஒருங்கிணைப்பாளர் அருளரசி நோக்கவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், ரூவியே சப்ரினா மேரி உட்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.