ADDED : செப் 20, 2026 08:04 PM
அரியாங்குப்பம்: புதுச்சேரி கலைஞர்கள் சங்கமம் சார்பில் நடந்த கலை விழாவை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
புதுச்சேரி கலைஞர்கள் சங்கமம் சார்பில், அபிேஷகப்பாக்கம் புதுவை மண்வாசம் மங்கலம் இசை மற்றும் இளையோர் கலைக்குழுவின் 10ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் கலை விழா நடந்தது.
விழாவை, அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார். கலைக்குழுவின் செயலாளர் கமலக்கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ., கலைப்பண்பாட்டுத்துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள், தட்சிணாமூர்த்தி, முருகவேல், செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பரதநாட்டியம், பக்தி இசை, கிராமிய இசை, கிராமிய நடனம், சிலம்பாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இளையோர் கலைக்குழுவின் தலைவர் விஜயன் நன்றி கூறினார்.
