/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூலநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
/
மூலநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED : ஜன 14, 2025 06:18 AM

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. காலை 5.00 மணிக்கு, திருவாசக பாடல்கள் வாசிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, சிவகாம சுந்தரி சமேத மாணிக்க நடராஜர் பெருமானுக்கு, பால், தயிர் , தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9.00 மணியளவில் ஆருத்ரா தரிசன மகா தீபாராதனை நடந்தது.
சுவாமி உள்புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உபயதாரர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தனது குடும்பத்தினருடன் பங்கேற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

