தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அருணாச்சலபிரதேசம், மிசோரம் மாநில உதய நாள் கொண்டாட்டம்

அருணாச்சலபிரதேசம், மிசோரம் மாநில உதய நாள் கொண்டாட்டம்

அருணாச்சலபிரதேசம், மிசோரம் மாநில உதய நாள் கொண்டாட்டம்


ADDED : பிப் 21, 2024 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 02:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அருணாச்சலபிரதேசம் மற்றும் மிசோரம் மாநில உதய நாள் கொண்டாட்டம், கவர்னர் மாளிகையில் நடந்தது.

ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பணிபுரியும், கல்வி பயிலும் அருணாச்சலபிரதேசம், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஐதராபாத்தில் உள்ள கவர்னர் தமிழிசை, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விழாவில் பங்கேற்றார். கவர்னர் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, விருந்தினர்களை கவுரவித்தார். மிசோரம் மாநில மாணவர்கள் குழு பாடல்களை பாடினார்.கவர்னர் தமிழிசை இணைய வழியாக பேசியதாவது;

அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இருந்து காவலர்கள், டாக்டர், ஆசிரியர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் இங்கு வந்து பணியாற்றுகின்றனர். புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு நன்றி. பிரதமரின் முன்னெடுப்பால், இதுபோன்று நடக்கும் நிகழ்ச்சிகள் மூலம் ஒன்றிணையும் நாம் எப்போதும் ஒற்றுமையோடு இருப்போம' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us