தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநள்ளாறு கோவிலில் ஆருத்ரா உற்சவம்

திருநள்ளாறு கோவிலில் ஆருத்ரா உற்சவம்

திருநள்ளாறு கோவிலில் ஆருத்ரா உற்சவம்


ADDED : ஜன 14, 2025 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் ஆருத்ரா உற்சவம் நடந்தது.

காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வர் கோவிலில், ஆருத்ரா உற்சவம் நடந்தது.

காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 10:10 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

அதனை தொடர்ந்து, நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பிரம்ம தீர்த்த கரையில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. தீர்த்தவாரி முடிந்து சுவாமிகள் கோவிலுக்கு செல்லும் வழியில் ஊடல் உற்சவம் நடைபெற்றது.

கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் சிங்கரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us