/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆஷா ஊழியர்கள் முதல்வரிடம் கோரிக்கை
/
ஆஷா ஊழியர்கள் முதல்வரிடம் கோரிக்கை
ADDED : பிப் 14, 2024 03:37 AM

புதுச்சேரி : புதுச்சேரி சுகாதாரத்துறை ஆஷா ஊழியர்கள் சம்பள பிரச்னை குறித்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், முதல்வர் ரங்கசாமி சுகாதாரத்துறையில் பணி புரிந்து வரும் ஆஷா ஊழியர்களுக்கு மாத ஊதியம், 6 ஆயிரத்தில் இருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
ஆனால் தற்போது அந்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என, புதுச்சேரி ஆஷா ஊழியர் சங்கத்தின் சார்பில், அனைத்து ஊழியர்களும் முதல்வர் ரங்கசாமியை நேற்று நேரில் சந்தித்து முறையிட்டனர்.
இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனரிடம் விவரங்களை கேட்டறிவதாகவும், மீண்டும் நாளை வந்து சந்தியுங்கள் எனவும் அவர்களிடம் முதல்வர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

