/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வரை சந்திக்க காத்திருந்த ஆஷா பணியாளர்கள்
/
முதல்வரை சந்திக்க காத்திருந்த ஆஷா பணியாளர்கள்
ADDED : டிச 03, 2025 05:56 AM

புதுச்சேரி: முதல்வரை சந்திக்க மழையில் காத்திருந்த ஆஷா பணியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
புதுச்சேரி, சுகாதாரத்துறையில் 240 ஆஷா பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்தனர். சம்பளத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி முதல்வரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆஷா பணியாளர்களுக்கு சம்பளம் 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்தார்.
அதன்படி ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி முதல்வரை சந்தித்து முறையிட்டு வந்தனர். கடந்த மாதம் முதல்வரை சந்தித்த பணியாளர்களிடம் , கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. நிதித் துறையிலிந்து சில விளக்கம் கேட்டுள்ளனர். விரைவில் உங்களுக்கு ஓராண்டு நிலுவைத் தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும் என, தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் அறிவித்தபடி ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி நீண்ட நேரமாக காத்திருந்த ஆஷா பணியாளர்கள் மழையின் காரணமாக முதல்வரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்று முதல்வர் சந்தித்து ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

