தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா


ADDED : ஜூன் 30, 2025 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 03:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை : சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் உள்ள வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நேற்று நடந்தது.

திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் 17ம் நுாற்றாண்டில் பராந்தக சோழர் காலத்தில் கட்டப்பட்ட சப்த மாதா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

27ம் தேதி குங்குமத்தால் அலங்காரம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்திலும், நேற்று முன்தினம் சந்தன காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று காலை ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி கால பூஜையில் வாராகி அம்மன் தேங்காய் பூவினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த 26ம் தேதி தொடங்கிய இந்த ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us