தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அசோக் ஆனந்த் பதவியேற்பு

அசோக் ஆனந்த் பதவியேற்பு

அசோக் ஆனந்த் பதவியேற்பு


UPDATED : அக் 14, 2026 09:06 PM

ADDED : அக் 14, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 09:06 PM ADDED : அக் 14, 2026 07:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக் கொண்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைதேர்தலில் என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்.

அவர், எம்.எல்.ஏ., வாக பதவியேற்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று காலை 9:40 மணியளவில் நடந்தது. அசோக் ஆனந்த், தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிததை தற்காலிக சபாநாயகர் அன்பழகனிடம் வழங்கினார்.

தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அசோக் ஆனந்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவருக்கு முதல்வர் ரங்கசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகரன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், வையாபுரிமணிகண்டன், சாய்சரவணன்குமார், அழகு, நாராயணசாமி, ரவிக்குமார், அய்யப்பன், ஜோஸ் சார்லஸ் மார்டின், மோகன்தாஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். சட்டசபை செயலர் தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us