/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாஜ்பாய் நுாற்றாண்டு விழா அரசே ஏற்று நடத்த வேண்டும் அசோக்பாபு எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : மார் 27, 2025 03:48 AM
புதுச்சேரி: 'வாஜ்பாய் பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை புதுச்சேரி அரசே ஏற்று நடத்த வேண்டும்' என, அசோக்பாபு எம்.எல்.ஏ., கோரிக்கை.
சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது:
நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை புதுச்சேரி அரசே கொண்டாட வேண்டும். அவர் மூன்று முறை நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். 60 ஆண்டு காலம் பொதுவாழ்வில் இருந்துள்ளார். 9 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல சாதனைகளை புரிந்தவர். பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி, உலக அரங்கில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த பெருமையும் இவரைச் சேரும். இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்தினார். கார்க்கில் போர் நடந்தபோது 'ஆபரேஷன் விஜய்' போர் திட்டத்தை செயல்படுத்தி நாட்டிற்கு வெற்றியை தேடி தந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் தான் ஜார்கண்ட், உத்திரகாண்ட், சட்டீஸ்கர் எந்த பிரச்னையும் இல்லாமல் பிரிந்தது.
பத்திரிக்கையாளராக பணியை துவங்கிய அவர், சுதந்திரப் போராட்ட தியாகி, வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் என மக்களின் தலைவராக விளங்கினார். அவருக்கு அரசியல் எதிரி கிடையாது. அவரது நுாற்றாண்டு பிறந்த நாளை புதுச்சேரி அரசே ஏற்று நடந்த வேண்டும். அவருக்கு உருவச்சிலையை நிறுவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.