/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., அமைப்பு செயலாளருடன் அசோக்பாபு எம்.எல்.ஏ., சந்திப்பு
/
பா.ஜ., அமைப்பு செயலாளருடன் அசோக்பாபு எம்.எல்.ஏ., சந்திப்பு
பா.ஜ., அமைப்பு செயலாளருடன் அசோக்பாபு எம்.எல்.ஏ., சந்திப்பு
பா.ஜ., அமைப்பு செயலாளருடன் அசோக்பாபு எம்.எல்.ஏ., சந்திப்பு
ADDED : நவ 30, 2024 06:33 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசியல் நிலவரம் தொடர்பாக அசோக்பாபு எம்.எல்.ஏ.,விடம் பா.ஜ., தேசிய அமைப்பு பொது செயலார் சந்தோஷ் கேட்டறிந்தார்.
புதுச்சேரி பா.ஜ.,வில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக புதுச்சேரி மாநில உறுப்பினர் சேர்க்கை குழு உறுப்பினர் அசோக்பாபு எம்.எல்.ஏ., டில்லியில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் பா.ஜ., அமைப்பு பொது செயலாளர் சந்தோைஷ நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை, மாநில அரசியல் நிலவரம், பொதுமக்களின் மனநிலை குறித்து கேட்டறிந்தார். அரியாங்குப்பம், காரைக்கால், மாகி, ஏனாம் மாவட்ட மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் அசோக்பாபு எம்.எல்.ஏ., உள்ளார்.
எனவே கிளை தேர்தல் தொடர்பாகவும் கேட்டறிந்தார். அப்போது விரைவில் புதுச்சேரி வர உள்ளதாகவும் தெரிவித்தார்.