ADDED : ஏப் 23, 2026 11:37 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: நாணமேடு சொர்ணா பைரவர் கோவிலில், வளர்பிறை அஷ்டமி பூஜை நடக்கிறது.
அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சொர்ணா பைரவர் கோவில் உள்ளது. இங்கு, வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி திதியில் யாகம், சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (24ம் தேதி) வளர்பிறை அஷ்டமியையொட்டி, மாலை 3:30 மணிக்கு பைரவர் ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை, லட்சுமி குபேர பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து, அலங்காரம் செய்து, பைரவர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது.
