/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடும்ப பிரச்னையில் ஏ.எஸ்.ஐ., தற்கொலை முயற்சி
/
குடும்ப பிரச்னையில் ஏ.எஸ்.ஐ., தற்கொலை முயற்சி
ADDED : அக் 08, 2025 12:25 AM
அரியாங்குப்பம் : குடும்ப பிரச்னையில், உதவி சப் இன்ஸ்பெக்டர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அபிேஷகப்பாக்கம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள், 42; ஐ.ஆர்.பி.என்.,ல் உதவி சப் இன்ஸ்பெக்டராக உள்ள இவர், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனின் பணி புரிந்து வருகிறார்.
இவரது குடிப்பழக்கத்தால், கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மதியம் சாப்பிட அருள் வீட்டிற்கு சென்றபோது, தம்பதிக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது அருள், மனைவி வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
திடுக்கிட்ட அவரது மனைவி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருளை மீட்டு புதுச்சேரி அரசு மருந்துவமனையில் சேர்த்தார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.