/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள லீக் போட்டி
/
மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள லீக் போட்டி
ADDED : நவ 20, 2025 06:02 AM

புதுச்சேரி: புதுச்சேரி சிறுவர் தடகள சங்கம் சார்பில் மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள லீக் போட்டி வீராம்பட்டினத்தில் நடந்தது.
இந்திய தடகள கூட்டமைப்பு, கேலோ இந்தியா மற்றும் சாய் ஆகியவை இணைந்து 'அஸ்மிதா தடகள லீக்' அமைப்பு மூலம் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட இளம் பெண்களின் தடகள திறமைகளை கண்டறிந்து, சர்வதேச போட்டிகளுக்கு மாவட்டங்கள் வாரியாக தயார் செய்து வருகின்றன.
அதன்படி, புதுச்சேரி மாநில தடகள சங்கத்தின் கீழ் இயங்கும் சிறுவர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் வீராம்பட்டினம், ஜே.பி., பவுண்டேஷன் விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கான 'அஸ்மிதா தடகள லீக்' போட்டிகள் நடந்தன.
ஜே.பி., பவுண்டேஷன் தலைவர் பிரேம்நாதன், டேனியல் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். தடகள சங்க செயலாளர் கோவிந்தசாமி, தலைவர் ராமலிங்கம், மாவட்ட தடகள சங்க தலைவர் தமிழப்பன், செயலாளர் ரகுராமன் வாழ்த்தி பேசினர்.
சங்க பொருளாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார். போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோபு, பிரேம்குமார், முருகன் செய்திருந்தனர்.

