/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடும்பத்தினர் மீது தாக்குதல்; 5 பேர் மீது வழக்கு பதிவு
/
குடும்பத்தினர் மீது தாக்குதல்; 5 பேர் மீது வழக்கு பதிவு
குடும்பத்தினர் மீது தாக்குதல்; 5 பேர் மீது வழக்கு பதிவு
குடும்பத்தினர் மீது தாக்குதல்; 5 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 05, 2024 06:33 AM
நெட்டப்பாக்கம் : சூரமங்கலத்தில் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி, பைக்கை சேதப்படுத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சூரமங்கலம் வி.வி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பத்மா, 45; தனியார் கம்பெனி ஊழியர். இவர், கடந்த 1ம் தேதி வேலைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்த மருமகளிடம், கொத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன்கள் விஜய், 24; பத்மநாபன், 27, ஆகியோர் ஆபாசமாக பேசினர்.
இதனை பத்மா, அவரது கணவர் ரங்கநாதன், மகன் துளசிதாசன், மாமனார் அழகநாதன், ஆகியோர் தட்டிக் கேட்டனர்.
அவர்களை அன்று மாலை, கொத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய், பத்மநாபன், ராமசாமி மகன்கள் ஏகநாதன், பழனி, விஜய் மனைவி கோமதி ஆகியோர் வீடு புகுந்து இரும்பு பைப், உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த பத்மா, அழகநாதன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
புகாரின் பேரில், விஜய் உட்பட 5 பேர் மீது மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.