/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்
/
பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்
ADDED : டிச 07, 2024 07:11 AM
புதுச்சேரி: பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ராதாபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன், 40; அரியூர் அடுத்த கீழுர் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இந்த பங்கிற்கு பெட்ரோல் போட வந்த கீழுரைச் சேர்ந்த ராஜவேலு மகன் லட்சுமணன் 27, என்பவர், முன் விரோதத்தில் பாலமுருகனை செங்கல்லால் தலையில் தாக்கினார். பாலமுருகன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதனை பார்த்த லட்சுமணன் அங்கிருந்து தப்பியோடினார். படு காயமடைந்த பாலமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பாலமுருகன் புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.