ADDED : பிப் 14, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : வில்லியனுார் அருகே முன்விரோதத்தால் சைடிஸ் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியவரை தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம், மாஞ்சாலை தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை ,39; இவர் பிள்ளையார்குப்பம் சாராயக்கடை அருகே சைடிஷ் கடை நடத்தி வருகின்றார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மோகனுக்கும் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு கிராமத்தில் தெருக்கூத்து நடந்தது. அப்போது கூத்து பார்த்துக்கொண்டிருந்த ஏழுமலையிடம், மோகன் தகராறில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றார். அருகே இருந்தவர்கள் ஏழுமலையை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து மோகனை தேடி வருகின்றனர்.

