/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை குழுக்களின் தலைவர்கள் மாநாடு புதுச்சேரியில் நவம்பர் மாதம் நடக்கிறது
/
சட்டசபை குழுக்களின் தலைவர்கள் மாநாடு புதுச்சேரியில் நவம்பர் மாதம் நடக்கிறது
சட்டசபை குழுக்களின் தலைவர்கள் மாநாடு புதுச்சேரியில் நவம்பர் மாதம் நடக்கிறது
சட்டசபை குழுக்களின் தலைவர்கள் மாநாடு புதுச்சேரியில் நவம்பர் மாதம் நடக்கிறது
ADDED : செப் 27, 2025 02:42 AM

புதுச்சேரி : நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டசபைகளில் உள்ள உரிமை மீறல், நன்னடத்தை குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கும் நான்கு நாள் மாநாடு வரும் நவம்பர் மாதம் புதுச்சேரியில் நடக்கிறது.
பாராளுமன்ற உரிமை மீறல் குழு சார்பில், நடத்தப்படும் இந்த மாநாட்டை, புதுச்சேரி சட்டசபை நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதனையொட்டி, இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆயத்த கூட்டம் நேற்று தலைமை செயலக கூட்டரங்கில், சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது.
தலைமைச் செயலர் சரத்சவுகான் முன்னிலை வகித்தார். அதனைத்து துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து மாநாட்டிற்கு வரும் 350 எம்.எல். ஏ.,க்கள் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு, கருத்தரங்கம் நடக்கும் இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து சபாநாயகர் செல்வம் பேசுகையில், 'புதுச்சேரியில் நடக்கும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
தலைமைச் செயலர் சரத் சவுகான் பேசுகையில், வடகிழக்கு பருவ மழைக்கா லமாக இருப்பதா ல், அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தவிட்டார். மாநாட்டில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, தேவையான வசதிகள் குறித்து சட்டசபை செயலர் தயாளன் விளக்கினார்.