/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை கட்டுமான கோப்பு கவர்னர் தமிழிசை விளக்கம்
/
சட்டசபை கட்டுமான கோப்பு கவர்னர் தமிழிசை விளக்கம்
ADDED : பிப் 22, 2024 07:02 AM
புதுச்சேரி, : புதிய சட்டசபை கட்டுமான கோப்பு தொடர்பாக. கவர்னர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:
சமீபத்தில், சட்டசபை கோப்பு தொடர்பாக சபாநாயகர் கருத்து சொன்னவுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அது, தவறானது. எந்த கோப்பிலும் சுயலாபத்தை நான் பார்த்ததில்லை. நிர்வாகரீதியாக கோப்பை பார்க்க வேண்டும்.
மக்களின் வரிப்பணம் மிச்சமாக வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டசபை கட்டுமான கோப்பை அதிக விவரமாக பார்க்கிறோம்.
செலவினம் அதிகளவில் உள்ளது. பார்லிமெண்ட் புதிய கட்டடத்தை ஒப்பிடும்போது செலவு அதிகம்.
அவசியமாக செலவிடப்பட வேண்டும்; ஆடம்பரமாக செலவிடப்பட்டு விடக்கூடாது என்பதால் கேள்வி கேட்டுள்ளோம். அதில் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது.
மூன்றாண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அரசுடன் இணைந்து செய்துள்ளேன். சுற்றுலா பாரடைஸாக புதுச்சேரியை மாற்ற மத்திய அரசிடம் திட்டம் தந்துள்ளேன்.
ரேஷனுக்கு பதில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் தரப்படுகிறது. இது, கடந்த ஆட்சியில் இருந்து தரப்படுகிறது.
ரேஷன்கடைகளை திறக்க முடியாது என சொல்லவில்லை. நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் உள்ளன. அதனால் உடன் திறக்க முடியவில்லை. அரசு மருத்துவமனையை விரிவுப்படுத்த ஆசை.
ஆனால் ஒத்துழைப்பு போதியளவில் இல்லை. இன்னும் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை கோப்பு தொடர்பாக கவர்னர் மாளிகை செயலகம் செய்திக்குறிப்பு:
தட்டாஞ்சாவடியில் ரூ. 600.37 கோடி செலவில் ஒருங்கிணைந்த சட்டசபை வளாகம் மற்றும் செயலக கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசின் சிறப்பு உதவி கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பூர்வாங்க திட்ட முன்மொழிவை அனுப்ப ஒப்புதல் கோரும் கோப்பு 18.01.2024 அன்று பெறப்பட்டது.
முன்னதாக, 26.10.2023 அன்று கவர்னர் தனது கோப்பில், கட்டுமானத்தின் பரப்பளவைக் கணக்கிடும்போது மாடிகளின் எண்ணிக்கை பரிசீலிக்கப்பட்டதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
சில சமீபத்திய கட்டுமானங்களுடன் ஒப்பிடும்போது செலவு மதிப்பீடுகள் தெளிவுபடுத்த வேண்டும். செலவில் நிதித்துறையின் கருத்துகளையும் பெறலாம் என்று குறிப்பிட்டார்.
விரிவான முன்மொழிவை தற்போது பொதுப்பணித்துறை சமர்ப்பித்துள்ளது. அது பரிசீலனையில் உள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கு கவர்னர் அலுவலகம் காரணமாக இருக்க முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.