தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை தேர்தல்: பைக்கில் வந்த ஓட்டுபோட்ட வேட்பாளர்கள் 

 சட்டசபை தேர்தல்: பைக்கில் வந்த ஓட்டுபோட்ட வேட்பாளர்கள் 

 சட்டசபை தேர்தல்: பைக்கில் வந்த ஓட்டுபோட்ட வேட்பாளர்கள் 


ADDED : ஏப் 09, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வேட்பாளர்கள் காரினை தவிர்த்து எளிமையாக பைக்கில் வந்து ஓட்டளித்தனர்.

அரசியல்வாதிகள் எப்போதுமே 'பவர்' காட்டுவதில் கில்லாடிகள். சொகுசு கார்கள், கறுப்புக் கண்ணாடி, கூடவே பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பு... இதுதான் நாம் வழக்கமாகப் பார்க்கும் அரசியல்வாதிகளின் பிம்பம்.

ஆனால், தேர்தல் நாளான நேற்று புதுச்சேரியில் உள்ள அரசியல்வாதிகள் கார்களைப் புறக்கணித்துவிட்டு, பைக்கில் சென்று ஓட்டளித்து எளிமையை வெளிப்படுத்தினர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எப்போதுமே யமஹா பைக்கில் சென்று ஒட்டளிப்பார். அவர் இந்த முறையும் வழக்கம்போல பைக்கில் வந்து தன் ஜனநாயகக் கடமையை ஆற்றினார். மேலும் காலாப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம், லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து ஆகியோர் ஸ்கூட்டர்களிலும். லாஸ்பேட்டை காங்., வேட்பாளர் வைத்தியநாதன் புல்லட்டில் நகர்வலமாக ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஓட்டு போட்டனர்.

இதேபோல் பல்வேறு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் கார்களை தவிர்த்து, பைக்கில் சென்று ஓட்டு போட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us