தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை தேர்தல்: பெண்களின் தலைமை பண்பை நிரூபித்த பிங்க் ஓட்டுச்சாவடிகள்

 சட்டசபை தேர்தல்: பெண்களின் தலைமை பண்பை நிரூபித்த பிங்க் ஓட்டுச்சாவடிகள்

 சட்டசபை தேர்தல்: பெண்களின் தலைமை பண்பை நிரூபித்த பிங்க் ஓட்டுச்சாவடிகள்


ADDED : ஏப் 09, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி;சட்டசபை தேர்தல் பெண்களின் தலைமை பண்பினை நிரூபிக்கும் களமாகவும் அமைந்தது.

நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது அந்த நாட்டின் பெண்கள் பொதுவெளியிலும், நிர்வாகத்திலும் எந்த மாதிரி நடத்தப்படுகின்றனர் என்பதை பொருத்தே அமையும். அந்த வகையில் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் தேர்தல் துறை மேற்கொண்ட ஒரு தனித்துவமான முயற்சி, ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாநிலத்தில் 1,099 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடந்தாலும், தொகுதிக்கு ஒரு ஓட்டுச்சாவடி என மொத்தம் 30 ஓட்டுச்சாவடிகள் பெண்களின் முழுமையான ஆளுமைக்குக் கீழ் இயங்கியது. பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற தாரக மந்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக, இந்தச் ஓட்டுசாவடிகள் முழுமையாக பெண் அரசு ஊழியர்களைக் கொண்டே நிர்வகிக்கப்பட்டன. இந்த 30 ஓட்டுச்சாவடிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் முதல், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் வரை அனைவரும் பெண்களாகவே இருந்தனர்.

ஓட்டுச்சாவடிக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் கையாண்டனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.,பாட் இயந்திரங்களை எவ்விதத் தடையுமின்றி கையாண்டனர். பதற்றமின்றி, மிகவும் நேர்த்தியாகவும் ஓட்டு பதிவை நடத்தி தேர்தல் துறையின் சபாஷ் பெற்றனர்.

இந்த ஓட்டுச்சாவடிகள் பெரும்பாலும் 'பிங்க்' நிற மையக் கருத்தைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. இது பெண் வாக்காளர்களிடையே ஒரு பாதுகாப்பான மற்றும் உற்சாகமான உணர்வை ஏற்படுத்தியது.

குறிப்பாக, முதல்முறை ஓட்டுபோட வந்த இளம்பெண்களுக்கு, அங்கிருந்த பெண் அதிகாரிகளின் நிர்வாகத் திறன் ஒரு பெரும் ஊக்கமாகவும் அமைந்தது. தேர்தல் பணி என்பது அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீடிக்கக்கூடிய ஒரு கடினமான பணி. படிவம் பூர்த்தி செய்தல் முதல் ஓட்டு இயந்திரங்களை 'சீல்' வைப்பது வரை பல நுணுக்கமான வேலைகள் இதில் அடங்கும்.

இத்தனை சவால்களையும் முறியடித்து, எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காமல் இந்தப் பெண் ஊழியர்கள் தங்கள் பணியைச் செவ்வனே முடித்தனர். அனுபவம் வாய்ந்த பெண் ஊழியர்களை மட்டும் நம்பாமல், இளம் பெண் ஊழியர்களுக்கும் இதில் சம வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் துறையின் இந்த தொலைநோக்குப் பார்வை, நிர்வாகப் பொறுப்புகளில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியுள்ளது. இது வெறும் ஓட்டுப்பதிவாக மட்டும் இல்லாமல், பெண்களின் தலைமைப் பண்பை நிரூபிக்கும் களமாகவும் விளங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us