/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விரிவுரையாளர்களுக்கு பணி ஆணை வழங்கல்
/
விரிவுரையாளர்களுக்கு பணி ஆணை வழங்கல்
ADDED : அக் 05, 2024 04:14 AM

புதுச்சேரி : விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி பள்ளிகல்வி துறையின் கீழ் நேரடி நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 67 விரிவுரையாளர்கள் பதவிக்கு 42 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரியில் 28 பேர், காரைக்காலில் 3 பேர், மாகியில் 9 பேர் மற்றும் ஏனாமில் 2 பேருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வி துறை செயலர் ஜவஹர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உட்பட பலர் உடனிருந்தனர்.