/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு
/
ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு
ADDED : பிப் 26, 2026 04:52 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் பணியாற்றி வந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான ராகவ், திவ்யா ஆகியோர் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த சில தினங்கள் முன், புதுச்சேரிக்கு வந்தநிலையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளான ராகவ் சைபர் கிரைம் பிரிவு சீனியர் எஸ்.பி.,யாகவும், திவ்யா புதுச்சேரி போக்குவரத்து பிரிவு சீனியர் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து பிரிவு சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில், இதற்கான உத்தரவை புதுச்சேரி தலைமை செயலாளர் சரத்சவுகான் பிறப்பித்துள்ளார்.

