/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் மீது கார் மோதல் : உதவி பேராசிரியர் பலி
/
பைக் மீது கார் மோதல் : உதவி பேராசிரியர் பலி
ADDED : ஜன 22, 2026 05:09 AM
புதுச்சேரி: விழுப்புரம் - நாகப்பட்டினம் பைபாசில் பைக் மீது கார் மோதி உதவி பேராசிரியர் இறந்தார்.
புதுச்சேரி அடுத்த காட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் சேதுராமன், 35; தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர். இவர், கடந்த 19ம் தேதி கல்லுாரியில் வேலை முடிந்துக் கொண்டு தனது ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் பைபாஸ், தனத்துமேடு அருகே சென்றபோது, பின்னால் வந்த மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 கார் (டி.என்.57 சி.ஓய் 5023) சேதுராமன் மீது மோதியது.
படுகாயமடைந்த அவரை கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, சேதுராமன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மதுரை, அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார் மீது வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

