/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவிப் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
உதவிப் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 26, 2025 07:04 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு கல்லுாரிகளில் பணி புரியும் உதவிப் பேராசிரியர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பதவி மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருக்கிறது. அதனை கண்டித்து, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி வாயில் முன்பு உதவிப் பேராசிரியர்கள் நேற்று மாலை 6:00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உதவிப் பேராசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சங்கரய்யா முன்னிலை வகித்தார்.புதுச்சேரியில் உள்ள அரசு கல்லுாரிகளில் இருந்து பரிந்துரை செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. யு.பி.எஸ்.சி., கடந்த 2018ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையினையும், இதுவரை புதுச்சேரி அரசு வெளியிடாமல் இருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய உதவிப் பேராசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் பணி ஓய்வு பெற்றுள்ளனர். கல்லுாரி பேராசிரியர்களுக்கு உரிய சம்பளத்தை பல்கலைக்கழக மானிய குழுவில் இருந்து புதுச்சேரி அரசு பெற்றுக் கொண்டு, அதனை உரிய காலத்தில் உதவிப் பேராசிரியர்களுக்கு வழங்காமல் அந்த பணத்தை வேறு திட்டங்களுக்கு திருப்பிவிடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.